கொங்கோவில் தொடருந்து விபத்தில் 75 பேர் உயிரிழப்பு
புதன், சூன் 23, 2010
- 23 திசம்பர் 2011: கொங்கோவில் தொடருந்து விபத்தில் 75 பேர் உயிரிழப்பு
- 23 திசம்பர் 2011: ஆஸ்திரேலியச் சுரங்கக் கம்பனி பணிப்பாளர்கள் பயணம் செய்த விமானம் கமரூனில் காணாமல் போனது
- 22 மார்ச்சு 2011: கொங்கோ விமான விபத்தில் 19 பேர் உயிரிழப்பு
கொங்கோ குடியரசின் தெற்குப் பகுதியில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 75 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை இரவு இந்த விபத்து இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடருந்து தடம் புரண்டு விபத்துள்ளாகியது. நான்கு பெட்டிகள் தூக்கி எறியப்பட்டதாகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூன்று நாள் தேசிய துக்க நாளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. காயப்பட்டோர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
500 கிமீ நீளமான தொடருந்துப் பாதை 1920களில் பிரான்ஸ் அந்நாட்டை ஆளும் போது கட்டாய வேலைத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டது. இப்பாதை நிர்மானிக்கப்படும் போது ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளிகள் கொல்லப்பட்டனர். இப்பாதை பின்னர் புனரமைக்கப்படவில்லை என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
ஒரே வாரத்தில் இந்நாட்டில் இடம்பெற்ற இரண்டாவது பெரும் விபத்தாகும். சென்ற வாரம் ஆஸ்திரேலிய சுரங்கத் தொழில் நிபுணர்கள 11 பேரை ஏற்றிச் சென்ற விமானம் ஒன்று கொங்கோ குடியரசில் வீழ்ந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர்.
மூலம்
[தொகு]- Congo train crash 'death toll rising - 76 killed', பிபிசி, ஜூன் 23, 2010