உள்ளடக்கத்துக்குச் செல்

ஒளியை விட வேகப் பயணம் பரிசோதனை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, செப்டெம்பர் 24, 2011

இதுவரை, இயற்பியலில் எந்தவொரு பொருளும் வெற்றிடத்தில் ஒளியை விட அதி வேகமாக செல்ல முடியாது என்பது நீண்ட காலமாக நிலைத்து வரும் ஒரு கொள்கை ஆகும். இந்தக் கொள்கையைப் ஒரு பரிசோதனை பொய்ப்பித்து உள்ளதாக இத்தாலிய ஆய்வு கூடம் ஒன்று அறிவித்துள்ளது.


மேலதிக பரிசோதனைகளும் உறுதிப் பாடுகளும் தேவை எனினும், அவர்கள் பரிசோதனை பின்வருமாறு: செனீவாவில் அமைத்துள்ள அணு ஆய்வுக்கான ஐரோப்பிய ஆய்வுகூடத் வேகமுடுக்கியில் இருந்து 450 மைல்களுக்கு அப்பால் உள்ள இத்தாலிய தேசிய ஆய்வுகூட உணர் கருவிக்கு நியூட்ரினோ என்னும் அணுத் துகிள்களை அனுப்பினர். இயற்பியலின் தற்போதை கொள்கைகளின் நியூட்ரினோ 299,792,458 மீட்டர்/வினாடி மேலே செல்வது சாத்தியம் இல்லை. ஆனால் நியூட்ரினோ 299,798,454 வேகத்தில் பயணித்தாக ஆய்வாளர்கள் கோருகிறார்கள்.


இந்தப் பரிசோதனைகள் தொடர்பாக பல்வேறு ஆய்வாளர்கள் ஐயம் தெரிவித்துள்ளார்கள். எல்லாத் தரப்பினரும் மேலதிக ஆய்வுகள் தேவை என்று கூறி உள்ளார்கள். அந்த முடிவு உண்மையானால் பிரபஞ்சத்தின் இயல்பு பற்றிய மிக முக்கியமான பௌதீக விதிகளில் ஒன்றை பொய்யாக்குவதாக இந்த கண்டுபிடிப்பு அமையும்.


தங்களது பரிசோதனை தந்துள்ள இந்த முடிவு சரிதானா என்பதை மற்றவர்களும் ஆராய்ச்சிகளை நடத்தி உறுதிசெய்ய வேண்டும் அல்லது தங்களது பிழையை சுட்டிக்காட்ட வேண்டும் என ஆய்வாளர்கள் விரும்புகின்றனர்.


வெளி இணைப்புகள்

[தொகு]