உள்ளடக்கத்துக்குச் செல்

அகச்சிவப்பு செய்மதிப் படங்கள் மூலம் எகிப்தியப் பிரமிடுகள் கண்டுபிடிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், மே 25, 2011

எகிப்தின் புதிய செய்மதிப் படங்களில் 17 தொலைந்த பிரமிடுகள் இனங்காணப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் அதிகமான கல்லறைகள், மற்றும் மூவாயிரம் பண்டையை குடியிருப்புகள் ஆகியவையும் உள்ளடங்கிய பூமிக்கடியில் உள்ள கட்டடங்களும் அகச்சிவப்புக் கதிர் மூலமான செய்மதிப் படங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


எகிப்தியப் பிரமிடுகள்

ஆரம்ப ஆய்வின் படி இரண்டு பிரமிடுகள் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.


"பிரமிடை அகழ்வாஅய்வு செய்வது என்பது ஒவ்வொரு தொல்பொருளாய்வாளரும் காணும் கனவு," என இவ்வாய்வுக்குத் தலைமை வகித்த அமெரிக்க தொல்பொருளியலாளர் சேரா பார்சாக் தெரிவித்தார்.


பூமிக்கு மேலாக 700 கிமீ தூரத்தில் செலுத்தப்பட்ட செய்மதி மூலம் எடுகக்ப்பட்ட படங்கள் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டன. இச்செய்மதியில் பூமியில் 1 மீட்டருக்கும் குறைவான விட்டமுள்ள பொருட்களையும் துல்லியமாகப் படம் பிடிக்கக் கூடிய புகைப்படக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. பூமிக்குக் கீழே உள்ள பொருட்களைக் கண்டறிவதற்கு அகச்சிவப்புக் கதிர் முறை பயன்படுத்தப்படுகிறது.


பண்டைய எகிப்தியர்கள் களிமண் செங்கல் மூலம் தமது வீடுகளையும், கட்டடங்களையும் கட்டியிருந்தனர். இச்செங்கல் கட்டிடங்களைச் சூழவுள்ள மணலை விட மிகவும் அடர்த்தி கூடவாக இருந்தன, எனவே அக்கட்டடங்களின் வடிவங்களை இலகுவாகக் காணக்கூடியதாக உள்ளது.


மேலும் பல தொல்பொருட்கள் இதன் மூலம் எதிர்காலத்தில் கண்டுபிடிக்க முடியும் என சேரா பார்சாக் தெரிவித்தார்.



மூலம்

[தொகு]