உள்ளடக்கத்துக்குச் செல்

அங்கோலா விமான விபத்தில் உயர் இராணுவ அதிகாரிகள் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், செப்டெம்பர் 15, 2011

அங்கோலாவில் இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் மூன்று உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட 30 பேர் கொல்லப்பட்டனர்.


உவாம்போ நகர விமான நிலையத்தில் இருந்து தலைநகர் லுவாண்டா நோக்கி நேற்று நண்பகல் அளவில் புறப்பட்ட இவ்விமானம் சிறிது நேரத்தில் வீழ்ந்து தீப்பற்றியதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விமானம் இரண்டாக வெடித்து பின்பகுதி தீப்பற்றி எரிந்துள்ளது. விமானி உட்பட 6 பேர் உயிர் தப்பினர்.


விபத்துக்குள்ளான விமானம் இராணுவ உயர் அதிகாரிகளின் உபயோகத்துக்காக அண்மையில் கொள்வனவு செய்யப்பட்ட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த இரு மாதங்களில் அங்கோலாவில் இடம்பெற்ற மூன்றாவது இராணுவ விமான விபத்து இதுவாகும். விமானம் ஏன் விபத்துக்குள்ளானது எனத் தெரியவில்லை என உயிர் தப்பிய விமானி தெரிவித்தார்.


மூலம்[தொகு]