உள்ளடக்கத்துக்குச் செல்

அட்லாண்டிஸ் விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை முடித்துத் திரும்பியது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மே 27, 2010


அட்லாண்டிஸ் விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று கென்னடி விண்வெளித் தளத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. இது மொத்தம் 11 நாட்கள், 18 மணி நேரம் விண்வெளியில் தரித்திருந்தது.


அட்லாண்டிஸ் கடைசித் தடவையாக தரையிறங்கியது.
அட்லாண்டிஸ் பன்னாட்டு விண்வெளி நிலையத்துடன் இணைந்து கொள்ளல்

எஸ்டிஎஸ்-132 (STS-132) என்ற விண்வெளிப் பயணத் திடட்த்தை முடித்துக்கொண்டு அட்லாண்டிஸ் விண்ணோடம் நேற்று புதன்கிழமை உள்ளூர் நேரப்படி 08:48:18 (12:48 UTC) மணிக்கு தரையிறங்கியது.


அட்லாண்டிஸ் விண்ணோடம் இம்முறை தன்னுடன் ரஷ்யத் தயாரிப்பான ரஸ்வியெத் என்ற விண்கலம் ஒன்றை பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு எடுத்துச் சென்றது. அத்துடன் இதில் சென்ற விண்வெளி வீரர்கள் மூன்று முறை விண்வெளியில் நடைப்பயணமும் மேற்கொண்டிருந்தனர்.


இது அட்லாண்டிசின் 32வது விண்வெளிப் பயணம் ஆகும். 25 ஆண்டு காலம் சேவையாற்றிய இது முதற் தடவையாக 1985 அக்டோபர் 3 இல் விண்ணுக்கு ஏவப்பட்டது.


இவ்விண்ணோடத்திற்கான கடைசிப் பயணம் இதுவாகும். டிஸ்கவரி, எண்டெவர் ஆகியன இவ்வாண்டுக்குள் இன்னும் ஒவ்வொரு பயணத்தை முடிக்கவுள்ளன. இப்பயணத்துடன் அட்லாண்டிஸ் நேரடியாக அருங்காட்சியகத்துக்கு அனுப்பப்படமாட்டாது. ஏனைய விண்ணோடங்கள் தமது பயணங்களை முடிக்கும் வரை அது கென்னடி விண்வெளித் தளத்தில் வைக்கப்பட்டிருக்கும். ஏனைய விண்ணோடங்கள் விண்ணுக்கு ஏவிய பின்னர் ஏதாவது கோளாறு ஏற்படும் இடத்தில் விண்வெளிவீரர்களை மீட்பதற்காக அட்லாண்டிஸ் அனுப்பப்படும்.

தொடர்புள்ள செய்திகள்

மூலம்