உள்ளடக்கத்துக்குச் செல்

அணுவாயுதத்தை ஏந்திச் செல்லக்கூடிய ஏவுகணையை பாக்கித்தான் பரிசோதித்தது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஏப்பிரல் 25, 2012

அணுவாயுதத்தை ஏந்திச் செல்லக்கூடிய ஏவுகணையை பாக்கித்தான் பரிசோதித்திருப்பதாக அந்நாட்டின் இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியா தனது நீண்ட-தூர ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்து ஒரு வாரத்தினுள் பாக்கித்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இந்தியா வரை செல்லக்கூடிய சாகீன்-1ஏ என்ற இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு நாடுகளும் 1998 ஆம் ஆண்டில் அணுவாயுதங்களை வெற்றிகரமாகச் சோதித்திருந்தன.


பாக்கித்தான் செலுத்திய ஏவுகணை 2,500 முதல் 3,000 கிமீ தூரம் வரை செல்லக்கூடியதாக இருக்கும் என பாதுகாப்புத்துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர், ஆனாலும் பாக்கித்தான் இது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை.


இந்தியா சென்ற வாரம் செலுத்திய அக்னி-5 ஏவுகணை 5,000 கிமீ வரை பாயக்கூடியது. அதாவது சீனாவைச் சென்று தாக்கவல்லது.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]