உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவின் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை சோதனை முயற்சி வெற்றியடைந்தது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஏப்பிரல் 19, 2012

இந்தியா கண்டம் விட்டு கண்டம் பாயும், அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லவல்ல ஏவுகணை அக்னி-5 ஐ வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. இதன் மூலம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வைத்துள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, உருசியா, சீனா ஆகிய நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.


முன்னதாக நேற்று இந்த ஏவுகணை சோதனை செய்யப்படுவதாக இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை 8.05 IST மணிக்கு ஒரிசாவின் வீலர் தீவில் இருந்து இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த சோதனை வெற்றியடைந்துள்ளதால் 2014 ஆம் ஆண்டுக்குள் இந்த ஏவுகணை இராணுவப் பயன்பாட்டிற்கு வரும் என கூறப்படுகிறது.


இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இந்த ஏவுகணை சோதனை முயற்சி இந்தியாவின் ஏவுகணை சோதனை மற்றும் மேம்பாட்டு வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும் என கூறியுள்ளார். மேலும் இதற்காக உழைத்த அனைத்து அறிவியலாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இந்தியா அதிகாரப்பூர்வமாக கூறாவிட்டாலும் இந்த ஏவுகணை சோதனை முயற்சி சீனாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்க உதவும் என கூறப்படுகிறது. இதுபற்றி சீனா உடனடியாக எதுவும் கூறாவிட்டாலும் சீன அரசுத் துறை நிறுவனமான சீன சென்ட்ரல் தொலைக்காட்சி (CCTV) இந்தியாவிற்கு இது ஒரு வரலாற்று நிகழ்வாகும் என கூறியுள்ளது.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]