அண்டத்தின் அழகி பட்டம் தவறுதலாக பிலிப்பைன்சு அழகிக்கு பதில் கொலம்பியா அழகிக்கு தரப்பட்டது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

செவ்வாய், திசம்பர் 22, 2015

அமெரிக்காவின் லாசு வேகாசு நகரில் நடந்த மிசு யூனிவர்சு என்னும் அண்டத்தின் அழகி பட்டம் முதலில் கொலம்பியா அழகியான அரிட்னா குடிர்ரேச்சுக்கு தவறுதலாக அளிக்கப்பட்டு பின் சரியான தேர்வான பிலிப்பைன்சு அழகி பியா அலோன்சோ வுர்ட்பேச்சுக்கு அளிக்கப்பட்டது.


இந்த தவறுக்கு பட்டம் பெற்ற அழகியின் பெயரை அறிவிக்கும் நிகழ்ச்சியின் நடத்துநர் இச்டீவ் கார்வே பொறுப்பேற்பதாக கூறினார். வெற்றி பெற்றவர் பெயருள்ள அட்டையை தவறாக படித்ததே இக்குழப்பத்துக்கு காரணம் என்றார்.


கீச்சு செய்யும் போது கொலம்பியா & பிலிப்பைன்சு பெயர்களின் ஆங்கில எழுத்துகளை தவறாக கீச்சினார். பின் அது அழிக்கப்பட்டது.


90 நிமிடங்களுக்கு பிறகே கொலம்பியா அழகியின் பட்டம் பறிக்கப்பட்டு பிலிப்பைன்சு அழகிக்கு தரப்பட்டது. இது குறித்து ஒரு பிலிப்பைன்சு காரர் முகநூலில் ஆரம்ப நிமிடத்தின் கவனம் பறிக்கப்பட்டு போட்டியை நடத்தும் நிறுவனம் தங்கள் நாட்டையும் நாட்டு அழகியையும் அசிங்கப்படுத்தி விட்டதாக கூறினார்.


19 முதல் 27 வயதுடைய 80 நாடுகளின் அழகிகள் பங்கெடுத்தனர். முதல் முறையாக நிகழ்ச்சியின் நான்கு நீதிபதிகளை தவிர பார்வையாளர்களும் வாக்களித்தனர்.


இந்த நிகழ்ச்சிக்கு தொடர்பில்லாவிடினும் இந்த நிகழ்ச்சி நடந்த அரங்கத்துக்கு அருகிலுள்ள கூட்டத்தில் கார் புகுந்ததில் குறைந்தது ஒருவர் உயிரிழந்தார் பலர் காயமுற்றனர்.


சென்ற ஆண்டு (2014) வரை என்பிசி யூனிவர்சலும் டோனல்ட் டிரம்பும் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தினார். யூன் மாதம் குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிட விரும்பிய போது டோனல்ட் டிரம்பு குடியேற்றத்துக்கு எதிரான கருத்து சொல்லும் போது லத்தீன் அமெரிக்கர்களை குற்றம் சுமத்தினார். லத்தீன் மொழி நிறுவனமான யூனிவிசன் இந்நிகழ்ச்சியை ஒளிபரப்புவதில் இருந்து விலகிக்கொண்டது. என்பிசி உடனான வணிகத்தை முறித்துக்கொண்டது.


இதனால் டோனல்ட் டிரம்பு இவ்விருநிறுவனங்கள் மீதும் வழக்கு தொடர்ந்தார். செப்டம்பர் மாதம் என்பிசி சமரசம் செய்து கொண்டார் அதன் படி அழகிப்போட்டியில் என்பிசியின் பங்குகளை பெற்றார். அதே மாதத்தில் மிசு யூனிவர்சு, மிசு யூஎசுஏ, மிசு டீன் யூஎசுஏ ஆகியவற்றை WME-IMG என்ற நிறுவனத்துக்கு விற்றார்.

.

மூலம்[தொகு]