உள்ளடக்கத்துக்குச் செல்

அந்தமான் தீவுகளில் 6.4 அளவு நிலநடுக்கம் தாக்கியது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூன் 1, 2010

இந்தியாவின் வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமான் தீவுகளில் இன்று செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:21:48 (திங்கள் 19:51:48 UTC), நேரத்தில் 6.4 அளவு நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக ஐக்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வு நிலையம் (USGS) அறிவித்துள்ளது.


நிலநடுக்கம் இடம்பெற்ற பகுதி

127.7 கிலோமீட்டர்கள் (79.4 ஆழத்தில்) இடம்பெற்றுள்ள இந்த நிலநடுக்கம் அந்தமான் தீவுகளில் போர்ட் பிளையர் நகரில் இருந்து தென்கிழக்கே 120 கிலோமீட்டர் தூரத்திலும், நிக்கோபார் தீவுகளில் வடக்கே மோகியன் நகரில் இருந்து 350 கிமீ தூரத்திலும், பாங்கொகொக்கில் இருந்து தென்மேற்கே 795 கிமீ தூரத்திலும் மையம் கொண்டிருந்தது.


இறப்புகள் அல்லது சேதம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. உள்ளூர் பகுதியில் மிகச் சிறிய அளவு ஆழிப்பேரலை இடம்பெறுவதற்கு சாத்தியங்கள் இருப்பதாக ஹவாயில் உள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. ஆனாலும் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய அளவு சுனாமி இடம்பெறமாட்டாது.

மூலம்

[தொகு]