அமெரிக்க நடிகர் கேரி கோல்மன் 42வது வயதில் காலமானார்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

சனி, மே 29, 2010


அமெரிக்க நடிகர் கேரி கோல்மன் நேற்று வெள்ளிக்கிழமை அன்று யூட்டா மாநிலத்தில் உள்ள யூட்டா பிராந்திய மருத்துவமனையில் காலமானார். டிபரெண்ட் ஸ்ட்ரோக்ஸ் (1978–1986) என்ற அமெரிக்க சூழ்நிலை நிகழ்ச்சியில் அர்னால்ட் ஜாக்சன் என்ற அவரது பாத்திரத்திற்காக சிறப்பாக அறியப்பட்டார்.


கேரி கோல்மன்

கோல்மன் மே 26 ஆம் நாளன்று தனது வீட்டில் மாடியில் இருந்து வீழ்ந்து தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நினைவு எதுவும் இல்லாத நிலையில் அவர் நேற்று மே 28 இல் பகலில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 42.


இவரது வாழ்நாள் பூராவும் பலவித மருத்துவ நோய்களுக்கு உள்ளாகியிருந்தார். இவையே இவரின் மரணத்திற்குக் காரணமா என இன்னும் அறியப்படவில்லை. இவரது இரண்டு சிறுநீரகங்களும் பழுதான நிலையில் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்டு நாளாந்த டயாலிசிசில் (dialysis) இருந்து வந்தார்.


கோல்மன் ”த ஜெஃபர்சன்ஸ்” (The Jeffersons), ”குட் டைம்ஸ்” (Good Times) ஆகிய புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் நடிப்புலகிற்கு அறிமுகமானார். ”டிபரண்ட் ஸ்ட்ரோக்ஸ்” என்ற தொடரில் ஆர்னல்ட் ஜாக்சன் என்ற நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்து உலகப் புகழ் பெற்றார்.

மூலம்[தொகு]

Bookmark-new.svg