அலைக்கற்றை ஊழல்: முன்னாள் அமைச்சர் ஆ. ராசா பிணையில் விடுதலை

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மே 16, 2012

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை (2ஜி) ஒதுக்கீடு ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா பிணையில் நேற்று விடுதலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோரில் ஏனையோர் அனைவரும் ஏற்கனவே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.


கடந்த ஆண்டு பெப்ரவரி 2-ம் தேதி ராசா கைது செய்யப்பட்டிருந்தார். அவர், நீதிமன்ற அனுமதி இல்லாமல் தமிழ்நாட்டுக்குச் செல்லக் கூடாது, தொலைத் தொடர்புத்துறை அலுவலகத்துக்கு செல்லக் கூடாது, சாட்சிகளைக் கலைப்பதற்கு முயற்சி செய்யக் கூடாது, தனது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் அவர் மீது விதிக்கப்பட்டுள்ளன.


அதே நேரத்தில், ராசா பிணையில் விடுதலை செய்யப்பட்டிருப்பது குறித்து திமுக தலைவர் மு. கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


இவ்வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் சரத்குமார், சினியுக் பில்ம்ஸ் கரீம் மொரானி, குசோகான் நிறுவன இயக்குநர்கள் ஆசிப் பல்வா மற்றும் ராஜிவ் அகர்வால் உள்ளிட்ட ஐவர் சென்ற ஆண்டு நவம்பர் இறுதியில் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.


மூலம்[தொகு]