உள்ளடக்கத்துக்குச் செல்

ஆத்திரேலியக் கோடீசுவரர் புதிய டைட்டானிக் கப்பல் ஒன்றைக் கட்டுகிறார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஏப்பிரல் 30, 2012

21 ஆம் நூற்றாண்டு நவீன டைட்டானிக் கப்பல் ஒன்றை ஆத்திரேலியப் பணக்காரர்களில் ஒருவரான கிளைவ் பால்மர் கட்டவிருக்கிறார். இக்கப்பலைக் கட்டும் பணிகளை அவர் சின்லிங் சிப்யார்டு என்ற சீனாவின் அரச நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியிருக்கிறார்.


அடுத்த ஆண்டு இறுதியில் இதற்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, 2016 ஆம் ஆண்டில் இது சேவைக்கு விடப்படும் என கிளைவ் பால்மர் ஆத்திரேலிய ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். டைட்டானிக் கப்பலின் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் புதிய கப்பல் நவீன தொழில்நுட்பங்களுடன் நிர்மாணிக்கப்படும் என அவர் தெரிவித்தார். அனைத்தும் திட்டமிட்டவாறு நிறைவு பெற்றால் இரண்டாம் டைட்டானிக்கின் கன்னிப் பயணம் லண்டனில் இருந்து நியூயோர்க்கிற்கு 2016 ஆம் ஆண்டில் செல்லும்.


டைட்டானிக் கப்பல் 1912 ஆம் ஏப்ரல் 15 ஆம் நாள் லண்டனில் இருந்து நியூயோர்க் செல்லும் வழியில் பனிப்பாறை ஒன்றில் மோதி மூழ்கியதில் 1,500 பேர் உயிரிழந்தனர். இந்நிகழ்வின் 100வது ஆண்டு நிறைவு நாள் இருவாரங்களுக்கு முன்னர் உலகெங்கும் நினைவு கூரப்பட்டது.


மூலம்

[தொகு]