உள்ளடக்கத்துக்குச் செல்

ஆத்திரேலியாவின் தூரமேற்கு ஆழ்கடலில் உயிருடன் எரிமலை கண்டுபிடிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, நவம்பர் 6, 2010


ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உயிருடன் இருக்கும் எரிமலை ஒன்றை ஆத்திரேலிய அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தெற்கு ஆத்திரேலியாவின் தூரமேற்குப் பகுதியில் உள்ள பெரும் ஆத்திரேலிய விரிகுடாவில் இது உள்ளது.

ஆத்திரேலியாவின் வரைபடத்தில் பெரும் ஆத்திரேலிய விரிகுடா

கடல் ஆய்வு மையம் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்து, 100 கடல் மைல் தொலைவில், 2000 மீட்டர் ஆழத்தில், கடலின் நிலப்பகுதியில் இருந்து 200 மீட்டர் உயரம் உள்ள இந்த எரிமலை கூம்பு வடிவில் 800 மீட்டர் விட்டத்தைக் கொண்டுள்ளது.


தெற்கு ஆத்திரேலிய ஆய்வு மற்றும் அபிவிருத்திக் கழகத்தின் அறிவியலாளர்கள் மற்றும் மாணவர்கள் டேவிட் கறி என்பவர் தலைமையில் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். 50 மில்லியன் ஆண்டுகளாக இந்த எரிமலை இருந்து வருவதாகத் தாம் நினைப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அந்த பகுதியில், மேலும் இதுபோன்ற எரிமலைகள் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.


இக்கண்டுபிடிப்பு எம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளது என ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார். இவ்வெரிமலையை முதலில் அவதானித்த தாஸ்மானியாவைச் சேர்ந்த ஆய்வு மாணவி அனா ஹில் என்பவர் நினைவாக அதற்கு தற்காலிகமாக அனாவின் பிம்பிள் (Anna’s Pimple) எனப் பெயரிட்டுள்ளனர். ஆனால் இது அதிகாரபூர்வமான பெயராக இருக்குமா என்பது தெரியவில்லை என முனைவர் கறி தெரிவித்தார்.


மூலம்