உள்ளடக்கத்துக்குச் செல்

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் காணாமல் போனது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், செப்டம்பர் 2, 2009, ஐதராபாத், இந்தியா:


ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் திடீரென மறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்தில் இருந்து சித்தூருக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டரில் சென்றார். ஆந்திராவில் நல்ல மழை பெய்து வருவதால், மேகமூட்டம் காரணமாக ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது.இதனால் கட்டுபாட்டு அறை, தலைமை செயலகம் என அரசு அலுவலகங்களில் பரபரப்பு ஏற்பட்டது. உள்துறை அமைச்சகம் இதுவரை யாரும் ராஜசேகர ரெட்டியை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளது. தனியார் ஹெலிகாப்டர் ஒன்றும், வான்படை ஹெலிகாப்டர்கள் இரண்டும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக மேலும் முன்னேற முடியாமல் இரண்டு ஹெலிகாப்டர்கள் திரும்பி வந்துவிட்டன. ஆள் இல்லாத விமானத்தை அனுப்பி முதல்வரை தேடும் முயற்சியிலும் ஆந்திர அரசு ஈடுபட்டிருக்கிறது.

பின்னர் வெளி வந்த செய்தி[தொகு]

மூலம்[தொகு]