உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்கானித்தானின் வடக்கே நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூன் 12, 2012

ஆப்கானித்தானின் வடக்கே நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற அடுத்தடுத்த இரண்டு 5.4 அளவு நிலநடுக்கங்களினால் 80 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


மலை ஒன்றின் ஒரு பகுதி சரிந்து வீழ்ந்ததால் ஏற்பட்ட நிலசரிவினால் பக்லாம் மாகாணத்தின் போர்க்கா மாவட்டத்தில் 23 வீடுகள் முற்றாக நிலத்தில் புதையுண்டன. புதையுண்டவர்களை மீட்கும் பணியில் நிவாரணப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


"இது ஒரு மனிதப் பேரவலம், ஒரு கிராமம் முழுவதும் அழிந்து விட்டது," என பக்லான் மாகான ஆளுனர் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார்.


"10 முதல் 20 மீட்டர்கள் வரை மண், மற்றும் கற்கள், பாறைகள் வீடுகளை மூடி விட்டன. இவை வீழ்ந்த வேகத்தைப் பார்த்தால், எவரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை," என ஆளுனரின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


நிலநடுக்கங்களின் தாக்கம் 170 கிமீ தூரத்தில் உள்ள தலைநகர் காபூலிலும் உணரப்பட்டது.


மூலம்

[தொகு]