உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்கானித்தானில் காவல்துறை அதிகாரியின் தாக்குதலில் நான்கு நேட்டோ வீரர்கள் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, செப்டெம்பர் 16, 2012

ஆப்கானித்தானத்தில் காவல்துறையினர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரினால் நான்கு நேட்டோ படை வீரர்கள் இன்று கொல்லப்பட்டதாக ஆப்கானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்தனர்.


இச்சம்பவம் நடப்பதற்கு ஒரு நாளுக்கு முன்பதாக சோதனைச்சாவடி ஒன்றில் காவல்துறையினரின் சீருடை அணிந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு பிரித்தானியப் படையினர் கொல்லப்பட்டனர். இவற்றுடன் இவ்வாண்டு ஆப்கானியப் படையினரால் கொல்லப்பட்ட நேட்டோ படையினரின் எண்ணிக்கை 51 ஆகும்.


வெள்ளிக்கிழமை அன்று தாலிபான்களின் தாக்குதலில் இரண்டு அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர். வேறு நிகழ்வுகளில், சனிக்கிழமை இரவு நிங்கார்கார் மாகாணத்தில் காவல்துறையினர் மீது தாலிபான்கள் தாக்குதல் நடத்தினர். பதில் தாக்குதலில் குறைந்தது 20 தாலிபான்கள் கொல்லப்பட்டனர்.


இதற்கிடையில், முகமது நபியை கேவலமாகச் சித்தரித்து அமெரிக்காவில் எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் தலைநகர் காபூலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


மூலம்[தொகு]