ஆப்கானித்தானில் 17 பேர் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஆகத்து 27, 2012

ஆப்கானித்தானின் மேற்கு எல்மாண்டு மாகாணத்தில் தாலிபான் தீவிரவாதிகளால், கேளிக்கைக் கொண்டாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட 17 பொதுமக்களின் தலை துண்டிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.


இரு பெண்கள், மற்றும் 15 ஆண்களின் இறந்த உடல்கள் மூசா காலா மாவட்டத்தில் உள்ள சாலையோரம் ஒன்றில் இன்று திங்கட்கிழமை காலையில் கிடக்கக் கண்டுபிடிக்கப்பட்டது.


பெண்கள் ஆடுவதைப் பார்ப்பதற்காகக் கேளிக்கை கொண்டாட்டம் ஒன்றில் கூடியிருந்தவர்கள் தாக்கப்பட்டதாக பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.


இதே வேளையில், இதே மாவட்டத்தில் வேறோர் இடத்தில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் 10 ஆப்கானிய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். கிழக்கு ஆப்கானித்தானில் இரண்டு அமெரிக்க இராணுவத்தினர் ஆப்கானியத் தேசிய இராணுவ வீரர் ஒருவரினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


மூலம்[தொகு]