உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்கானியத் தலிபான்களின் தாக்குதலில் 30 அமெரிக்க இராணுவத்தினர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஆகத்து 7, 2011

கிழக்கு ஆப்கானித்தானில் உலங்கு வானூர்தி ஒன்று தலிபான்களின் தாக்குதலுக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 30 அமெரிக்கப் படையினர், ஏழு ஆப்கானியப் படையினர், மற்றும் ஒரு பொது மகன் உட்பட 38 பேர் கொல்லப்பட்டனர்.


சினூக் ரக உலங்கு வானூர்தி

ஆப்கானிஸ்தானில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் அதிக அமெரிக்கர்கள் கொல்லப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.


வார்டாக் மாகாணத்தில் சனிக்கிழமை அதிகாலையில் சினூக் என்ற இந்த அமெரிக்க உலங்கு வானூர்தி சுட்டு வீழ்ததப்பட்டதாக ஆப்கானிய அரசுத்தலைவர் அமீட் கர்சாய் தெரிவித்தார். தலிபான்களுக்கு எதிரான தாக்குதல் ஒன்றை நடத்தி விட்டுத் திரும்பும் வழியிலேயே இது சுட்டு வீழ்த்தப்பட்டது.


தமது வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டதை பராக் ஒபாமாவின் உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக ஏஎஃப்பி செய்தியாளர் தெரிவித்துள்ளார். தலிபான்கள் வானூர்தி ஒன்றைச் சுட்டு வீழ்த்துவது மிக அரிதான செயல் என பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


மூலம்

[தொகு]