ஆப்கானிய பயணிகள் விமானம் வீழ்ந்து விபத்துக்குள்ளானது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மே 17, 2010

40 பேரை ஏற்றிச் சென்ற ஆப்கானியப் பயணிகள் விமானம் ஒன்று குண்டூசுக்கும் காபூலுக்கும் இடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தலைநகர் காபூலிற்கு வடக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் சலாங் பாஸ் என்ற மலைப்பகுதியில் பாமிர் ஏர்வேஸ் விமானம் வீழ்ந்துள்ளதாக நம்பப்படுகிறது.


இன்று காலையில் இருந்து இவ்விமானம் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில வெளிநாட்டவர்களும் இவ்விமானத்தில் பயணித்ததாக சொல்லப்படுகிறது.


அமெரிக்க, மற்றும் நேட்டோ மீட்புப் பணியாளர்கள் விபத்து நடந்த இடத்தை நோக்கி சென்றுள்ளார்கள்.


"38 பயணிகளும் 5 விமானச் சிப்பந்திகளும் இவ்விமானத்தில் பயணித்து உறுதி செய்யப்பட்டுள்ளது," என உள்ளக அமைச்சர் செமராய் பஷாரி தெரிவித்தார்.


விபத்துக்குள்ளான பாமிர் ஏர்வேஸ் தனியாருக்குச் சொந்தமானது. கடந்த 1995 முதல் ஆப்கானில் செயல்பட்டு வருகிறது. தினமும் அமீரகத்தில் உள்ள w:துபாய் நகருக்கு சேவை வழங்கி வருகிறது.

மூலம்[தொகு]