உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்கானிஸ்தானில் இரண்டு அமெரிக்கப் படையினரை தலிபான்கள் பிடித்தனர்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூலை 25, 2010

ஆப்கானித்தானில் கடந்த வெள்ளியன்று காணாமல் போன இரண்டு அமெரிக்கப் படைவீரர்களைக் கண்டுபிடிப்பதற்காக அங்கு பலத்த தேடுதலை ஆரம்பித்திருப்பதாகக் கூட்டுப்படையினர் தெரிவித்தனர்.


ஆப்கானிஸ்தானின் கிழக்கில் லோகார் மாகாணம்

மூன்று படைவீரர்களைத் தாம் கைப்பற்றியதாகவும் அதில் ஒருவர் இறந்து விட்டதாகவும் தலிபான்களின் பேச்சாளர் தெரிவித்ததாக ஸ்கைநியூஸ் அறிவித்துள்ளது.


காணாமல் போனோரைப் பற்றிய தகவல்களைத் தருவோருக்கு $20,000 சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அவர்களது காபுல் தளத்தில் இருந்து சென்றதாகவும், ஆனால் அவர்கள் திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. கடைசியாக அவர்கள் லோகார் மாகாணத்தில் காணப்பட்டனர்.


இவர்கள் கைப்பற்றப்படுவதற்கு முன்னர் போராளிகளுடன் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டதாக ஆப்கானிய அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் பயணம் செய்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2099 ஜூன் மாதத்தில் தலிபான்களால் கைப்பற்றப்பட்ட போவ் பேர்க்டால் என்னும் போர்வீரர் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. இவரைப்பற்றிய காணொளிகளை கடந்த ஏப்ரல் மாதத்தில் தாலிபான்கள் வெளியிட்டிருந்தனர்.

மூலம்[தொகு]