உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்கானிஸ்தானில் பன்னாட்டுப் படையினர் ஆறு பேர் கொல்லப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சனவரி 12, 2010


ஆப்கானிஸ்தானில் சண்டையிட்டு வரும் பன்னாட்டு இராணுவப் படையைச் சேர்ந்த ஆறு பேர் அங்கு அண்மையில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்டுள்ளனர் என்று நேட்டோ படை தெரிவித்துள்ளது.


தெற்கு ஆப்கானிஸ்தானில் ஆயுததாரிகளுடன் நடந்த சண்டைகளின்போது மூன்று அமெரிக்க வீரர்களும், ஒரு பிரித்தானிய வீரரும் கொல்லப்பட்டுள்ளனர்.


இதேபோன்று வடகிழக்கு காபூலில் இடம்பெற்ற ஒரு மோதலில் பிரெஞ்சு இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.


ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டைகளை முன்னெடுக்க கூடுதல் துருப்புக்களை அனுப்ப நேட்டோ நாடுகள் திட்டமிட்டுள்ள நிலையில், பன்னாட்டு படையின் இராணுவ வீரர்கள் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.


இதற்கிடையில், அண்மையில் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற ஒரு கருத்துக் கணிப்பில், பெரும்பான்மையானோர் தமது நாடு முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருப்பதாக நம்பிக்கை தெரிவித்திருந்தனர். கிட்டத்தட்ட 1500 இற்கும் அதிகமான ஆப்கானிஸ்தர்கள் பங்கு பற்றிய இக்கருத்துக் கணிப்பில், 70 விழுக்காட்டினர் தமது நாடு சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதாகத் தெரிவித்தனர். இது சென்ற ஆண்டு நடத்தப்பட்ட கணிப்பிலும் 40% அதிகமாகும்.

மூலம்

[தொகு]