உள்ளடக்கத்துக்குச் செல்

ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் 9 திரைப்படங்கள் அவர் இறந்து 30 ஆண்டுகளின் பின் மீள்விக்கப்பட்டன

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மே 1, 2010


ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் இயக்கத்தில் அவரது ஆரம்ப காலத்தில் உருவாக்கப்பட்ட குறைந்தது ஒன்பது ஊமைத் திரைப்படங்கள் மீள்விக்கப்பட்டுள்ளதாகவும், அவை 2012 ஆம் ஆண்டளவில் திரையிடப்படும் என்றும் தி இண்டிப்பெண்டண்ட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.


ஆல்பிரட் ஹிட்ச்க்காக்

இந்த மறக்கபட்ட ஊமைத் திரைப்படங்கள் ஹிட்ச்க்காக் தனது இளமைக்காலத்தில் உருவாக்கியவை என்றும், இவை அவரது பிற்கால ஹாலிவுட் திரைப்படங்களுக்கு வழிகாட்டியாக அமைந்தன என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவை 2012 ஆம் ஆண்டில் வெளியிடப்படும். ஆனாலும் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.


ஹிட்ச்காக்கின் த மவுண்டன் ஈகல் என்ற திரைப்படம் 1926 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. இதுவே அவரது கடைசி ஊமைத் திரைப்படம் ஆகும்.


மீள்விக்கப்பட்ட ஹிட்ச்க்காக்கின் மூன்று ஊமைத் திரைப்படங்கள் ட்த பிளெசர் கார்டன் (1925), த லொட்ஜர் (1927), த ஃபார்மர்ஸ் வைஃப் (1928) ஆகியவை ஆகும்.


ஆல்பிரட் ஹிட்ச்காக் இறந்து 30 ஆண்டுகள் சென்ற வியாழக்கிழமை அன்று நினைவுகூரப்பட்டது. ஆல்பிரட் ஜோசப் ஹிட்ச்காக் (ஆகஸ்ட் 13, 1899 - ஏப்ரல் 29, 1980) ஆங்கிலத் திரைப்பட இயக்குனரும் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் திரைப்படத் துறையில் ஈடுபட்ட இவர், 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கினார். ஊமைத் திரைப்படங்கள் தொடங்கி, கறுப்பு - வெள்ளை திரைப்படங்கள், வண்ணத் திரைப்படங்கள் என பலவித திரைப்படங்களை உருவாக்கினார்.


தொடந்து பல வெற்றி படங்களை இயக்கி, தனது காலத்தில் மிகவும் பிரபலமடைந்த இயக்குனராகத் திகழ்ந்தார். பல மர்மப் படங்களை இயக்கிய இவர், தனது சிறந்த இயக்கும் பாணிக்காக இன்றும் பேசப்படுகிறார்.


ஃபாமிலி புளொட் (1976) அவரது கடைசித் திரைப்படம் ஆகும்.

மூலம்

[தொகு]