உள்ளடக்கத்துக்குச் செல்

ஆஸ்திரேலியக் காவல்துறையினரின் இனவெறியைத் தூண்டும் மின்னஞ்சல்கள்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மார்ச்சு 25, 2010

இனவெறியைத் தூண்டும் வகையில் மின்னஞ்சல்களைத் தமக்குள் பரிமாறியதற்காக ஆஸ்திரேலிய மாநிலமான விக்டோரியாவில் கிட்டத்தட்ட 100 காவல்துறையினர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.


வெள்ளையில்லாத மனிதர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகும் படம் ஒன்று காவல்துறையினரின் கணினிகளினூடாக அனுப்பப்பட்டுள்ளது. பலர் இச்செய்திக்கு இனவெறியைத் தூண்டும் வகையில் பின்னூட்டம் இட்டு அதைப் பலருக்கும் அனுப்பியுள்ளதாக “தி ஏஜ்” பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் இடத்து இவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.


மெல்பேர்ண் மாநகரத்தில் கடந்த மாதங்களில் இந்திய மாணவர்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்கத் தவறியுள்ளதாக விக்டோரிய மாநிலக் காவல்துறையினர் மீது குற்றம் சாட்டப்படுகிறது.


காவல்துறையினரில் சிலர் இனவெறியாளர்கள் என காவல்துறை அதிகாரி இம்மாத முற்பகுதியில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஆப்பிரிக்க இளைஞர் ஒருவரை அடித்துக் கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

மூலம்

[தொகு]