ஆஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூலை 17, 2010

ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் 21 ஆம் நாள் பொத்தேர்தல்கள் நடைபெறும் என அந்நாட்டுப் பிரதமர் ஜூலியா கிலார்ட் இன்று அறிவித்தார்.


பிரடமர் ஜூலியா கிலார்ட்

ஆஸ்திரேலியாவின் முதலாவது பெண் பிரதமர் கிலார்ட் இத்தேர்தல் மிகவும் கஷ்டமானதும் நெருக்கமானதாகவும் இருக்கும் எனத் தெரிவித்தார்.


கெவின் ரட் பிரதமர் பதவியில் இருந்து மூன்று வாரங்களுக்கு முன்னர் அகற்றப்பட்ட பின்னர் ஆளும் தொழிற் கட்சி தனது புதிய தலைவராக கிலார்டைத் தேர்ந்தெடுத்தது.


இம்முறை பொருளாதாரம், சுகாதாரம், காலநிலை மாற்றம், மற்றும் குடிவரவு போன்ற பிரச்சினைகளில் ஆளும் தொழிற் கட்சியும் முக்கிய எதிர்க்கட்சியான லிபரல் கட்சிக் கூட்டணியும் முக்கியமாகக் கவனம் செலுத்தும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.


அண்மைய கருத்துக் கணிப்புகளின் படி, தொழிற் கட்சி முன்னணியில் நிற்கிறது. எனவே தொழிற்கட்சி இரண்டாவது முறையும் வெற்றி பெறும் என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.

மூலம்[தொகு]