இதயமுடுக்கியைக் கண்டுபிடித்த வில்சன் கிரேட்பாட்ச் காலமானார்
- 17 பெப்ரவரி 2025: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 17 பெப்ரவரி 2025: பில்லியனர் தேவீது ராக்பெல்லர் தன் 101 வயதில் மறைந்தார்
- 17 பெப்ரவரி 2025: போர்க்குற்றங்களுக்காக இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் வங்காளதேசத்தில் தூக்கிலிடப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: அப்துல்கலாம் இயற்கை எய்தினார்
- 17 பெப்ரவரி 2025: சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ நுரையீரல் அழற்சி காரணமாக இறந்தார்
புதன், செப்டெம்பர் 28, 2011
செயற்கையாக உட்பொருத்தக்கூடிய இதயமுடுக்கியைக் கண்டுபிடித்த வில்சன் கிரேட்பாட்ச் தனது 92வது வயதில் நேற்று நியூயோர்க்கில் காலமானார்.

இதயமுடுக்கி முதன்முதலாக 1960 ஆம் ஆண்டில் மனிதருக்குப் பொருத்தப்பட்டது. இதன் மூலம் இதயத் துடிப்பு ஒரே சீராக இயங்க வைக்கப்படுகிறது. தற்போது, ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் இதனைப் பொருத்தி வருகின்றனர்.
கிரேட்பாட்ச் லிமிட்டெட் என்ற இவரது நிறுவனம் 1970 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. உட்பொருத்தக்கூடிய இதயமுடுக்கிகளுக்கு மின்கலங்களை இந்நிறுவனம் உற்பத்தி செய்து விநியோகித்தது.
1983 ஆம் ஆண்டில் தொழில்நிலைப் பொறியாளர்களின் தேசிய மன்றம் கிரேட்பாட்சின் கண்டுபிடிப்பை ஐம்பதாண்டுகளில் 10 பெரும் பொறியியல் கண்டுபிடிப்புகளில் ஒன்றாக அறிவித்தது. தனது கடைசிக் காலங்களில் கிரேட்பாட்ச் எயிட்ஸ் நோயைக் குணப்படுத்துவது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டிருந்தார்.
முதலாவது வெற்றிகரமான செயற்கை இதயமுடுக்கி நியூயோர்க்கில் உள்ள பஃபல்லோ மருத்துவமனையில் பொருத்தப்பட்டது. 77 வயதான நோயாளி இதனைப் பொருத்தி 18 மாதங்கள் வரை உயிரோடிருந்தார்.
மூலம்
[தொகு]- Implantable pacemaker inventor Wilson Greatbatch dies, பிபிசி, செப்டம்பர் 28, 2011
- Wilson Greatbatch, Pacemaker Inventor, Dies at 92, நியூயோர்க் டைம்ஸ், செப்டம்பர் 28, 2011