இந்திய பிராந்திய ஊடுருவும் துணைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

சனி, ஏப்ரல் 5, 2014


இந்தியா உலகிலேயே தன்னிச்சையாக செயற்கைக் கோள்களைத் தயாரித்து விண்ணில் செலுத்தும் திறனில் 5வது இடத்தில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக அதன் பிராந்தியத்தை கண்காணிப்பதற்காக இந்திய பிராந்திய ஊடுருவும் துணைக்கோள் (ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி) ஒன்றை நேற்று விண்ணில் ஏவியுள்ளது.


இந்தியாவின் செயற்கைக்கோள் ஏவுதளமான ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீஹரிகோட்டா என்னும் இடத்திலிருந்து 02.04.2014 புதன் கிழமை காலை 6.44 மணிக்கு துவங்கிய கவுன்ட்டவுன் 04.04.2014 வெள்ளிக்கிழமை மாலை 5.14 மணிக்கு முடிந்து பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது.


இந்த துணைக்கோளானது இந்திய எல்லையில் 1,500 கி.மீ. சுற்றளவுக்கு கடல் வழிகள், கடல் எல்லைகள், தரைவழிகள், வான்வழிகள், கடல்வழிப்பாதைகள், கடல் போக்குவரத்து, இயற்கை பேரிடர் போன்றவைகளைக் கண்காணிக்கும்.


மூலம்[தொகு]

Bookmark-new.svg