உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய விண்வெளி ஆய்வு மையம் இசேகட்சாட்-1 செயற்கை கோளை விண்ணுக்கு ஏவியது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், செப்டெம்பர் 26, 2016

இந்திய விண்வெளி ஆய்வு மையம் சிறி அரிக்கோட்டாவிலுள்ள சதிசு தவான் ஏவுதளத்திலிருந்து முனைய துணைக்கோள் ஏவுகலம் -சி35 மூலம் 371 கிலோ எடையுடைய இசேகட்சாட்-1 என்ற செயற்கை கோளையும் மேலும் ஏழு சிறிய செயற்கை கோள்களையும் விண்ணில் ஏவியது.


இது 730 கிமீ தூரத்தில் நிலைநிறுத்தப்படும்.


இசேகட்சாட்-1 என்பது காலநிலையை ஆராயும் செயற்கை கோள். இதைத்தவிர 10 கிலோ எடையுடைய 1 சதுர கிமீ அளவு நுணுக்கத்தில் உள்ள எதிர்மின்னியல் துகள்களை அளக்க மும்பை இந்திய தொழில் நுட்பக்கழகத்தின் பிராத்தம் என்ற செயற்கை கோளையும் 5 கிலோ எடையுடைய தொலையுணரத்தல் திறனை ஆராய பெங்களூரிலுள்ள மக்களின் சமூக கல்வி (பிஇஎசு) பல்கலைக்கழகத்தின் பிசாட் என்ற செயற்கை கோளையும் இந்திய விண்வெளி அமைப்பு அனுப்பியது.


மேலும் அல்ஜீரியாவின் மூன்று செயற்கை கோளையும் கனடாவின் ஒரு செயற்கை கோளையும் ஐக்கிய அமெரிக்காவின் பாத்பைண்டர் என்ற ஒரு செயற்கை கோளையும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் தனது முனைய துணைக்கோள் ஏவுகலம் -சி35 மூலம் ஏவுகிறது.


இதற்கு முன்பு இந்திய விண்வெளி ஆய்வு மையம் தனது முனைய துணைக்கோள் ஏவுகலத்தை ஏவியிறுந்தாலும் இப்போதைய செலுத்தி முதன் முறையாக இரண்டு வேறுபட்ட வட்டத்தில் செயற்கை கோள்களை நிலை நிறுத்துகிறது.


இசேகட்சாட்-1 இனின் ஆயள் ஐந்து ஆண்டுகளாகும். திங்கள் கிழமை ஏவப்பட்டதையும் சேர்த்து இதுவரை இந்தியா 79 வெளிநாட்டு செயற்கை கோள்களை ஏவுயுள்ளது. ஆண்டுக்கு பன்னிரண்டு முறை ஏவுகலன்களை செலுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

மூலம்

[தொகு]