இந்தோனேசியாவின் சினாபுங் எரிமலை மீண்டும் வெடித்ததில் 14 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, பெப்பிரவரி 2, 2014

இந்தோனேசியாவின் சினாபுங் எரிமலை நேற்று சனிக்கிழமை வெடித்துச் சீறியதில் பள்ளிச் சிறுவர்கள் 4 பேர் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். சிறுவர்கள் 4 பேரும் எரிமலையை வேடிக்கை பார்க்கச் சென்றபோது அதில் சிக்கி உள்ளனர்.


சினாபுங்] எரிமலை

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிலுள்ள சினாபுங் எரிமலை கடந்த சில மாதங்களாக குமுறிக்கொண்டிருந்தது. எனவே அப்பகுதியை சுற்றியிருந்த 30,000 க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றி, பாதுகாப்பான இடங்களில் அரசு தங்கவைத்தது.


இந்த எரிமலைச் சீற்றத்தில் மேலும் பலர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது, எரிமலைக்கு அருகில் உள்ள பாதைகளில் அதிக அளவு வெப்பம் கொண்ட சாம்பல்கள் பரவிக் கிடப்பதால் மீட்புப் பணி பாதிக்கப்பட்டுள்ளது என தேசிய பேரிடர் மீட்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் நக்ரோஹோ தெரிவித்துள்ளார்.


சினாபுங் எரிமலை மெதான் என்ற சுமாத்திராவின் முக்கிய நகரத்தில் இருந்து தென்மேற்கே 60 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இது 1600 ஆம் ஆண்டில் வெடித்ததற்குப் பின்னர் முதற்தடவையாக 2013 ஆகத்து மாதத்தில் வெடித்தது.


இந்தோனேசிய தீவுக் கூட்டத்தில் குறைந்தது 129 எரிமலைகள் காணப்படுகின்றன. இந்தோனேசியத் தீவுகள் பசிபிக் எரிமலை வளையத்தில் காணப்படுவதால் இங்கு நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் அடிக்கடி நிகழ்கின்றன.


மூலம்[தொகு]