உள்ளடக்கத்துக்குச் செல்

இரசியா ஏவிய மூன்று துணைக்கோள்கள் புவிச்சுற்றுப்பாதையில் செல்ல முடியாமல் திரும்பின

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், திசம்பர் 6, 2010

கசக்ஸ்தானின் பைக்கனூர் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட மூன்று இரசிய செயற்கைக்கோள்கள் (satellites) புவிச்சுற்றுப்பாதையில் செல்ல முடியாமல் திரும்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


செய்மதிகளைக் கொண்டு சென்ற புரத்தோன் ஏவுகணை

இந்த செயற்கைக்கோள்களும் அவற்றை ஏந்திச் சென்ற ஏவுகணையும் அவாயிற்கு அருகே பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்திருக்கலாம் என உருசியாவின் வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


குளோனஸ் எனப்படும் போட்டி புவியிடங்காட்டி (GPS) அமைப்பு ஒன்றின் பகுதியாகவே இந்த செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டன. இவை நேற்று ஞாயிற்றுக்கிழமை புரத்தோன்-எம் என்ற ஏவுகணை மூலம் செலுத்தப்பட்டன.


புரத்தோன் ஏவ்கணை ஏவப்பட்ட சில நிமிட நேரத்தில் அதன் பாதையை விட்டு 8 பாகை விலகிச் செல்ல ஆரம்பித்ததாக இரசிய செய்தி நிறுவனம் ரியா-நோவஸ்த்தி செய்தி வெளியிட்டுள்ளது. புரத்தோன் ஏவுகணையில் எவ்வித தொழில்நுட்பக்கோளாறும் இருக்கவில்லை என்றும் கணினியின் நிரலாக்கத்தில் இடம்பெற்ற தவறே இதற்குக் காரணம் என அது மேலும் தெரிவித்துள்ளது.


இரசியா இவ்வாண்டு பல செய்மதிகளை வெற்றிகரமாக ஏவியுள்ளது. புவியிடங்காட்டிக்கான புதிய அமைப்பு அடுத்த ஆண்டுக்குள் முடிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.


மூலம்

[தொகு]