உள்ளடக்கத்துக்குச் செல்

இராணுவ விண்வெளி விமானத்தை அமெரிக்கா ஏவியது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஏப்பிரல் 23, 2010


ஐக்கிய அமெரிக்காவின் இராணுவத்துக்காகத் தயாரிக்கப்பட்ட விண்வெளி விமானம் (spaceplane) ஒன்று புளோரிடாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.


X-37B விண்வெளி விமானம்

நாசாவின் மீளப்பாவிக்கப்படும் விண்ணோடத்தை (space shuttle) ஒத்த X-37B என்ற இந்த விண்வெளி வானூர்தி வியாழக்கிழமை அன்று கேப் கனவரல் வான் படைத்தளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி 1952 (2352 GMT) மணிக்கு விண்ணுக்கு ஏவப்பட்டது.


ஆளில்லாமல் செலுத்தப்பட்ட இந்த விண்கலம் அமெரிக்க வண்வெளித் திட்டத்தில் இணைந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது விண்வெளியில் மேற்கொள்ளும் பரிசோதனைத் தரவுகளை மேலதிக ஆய்வுக்காக பூமிக்கு அனுப்பும்.


9மீ நீளமும் 4.5மீ மொத்த அகலமும் கொண்ட இந்த மீளப் பாவிக்கப்படத்தக்க வானூர்தி விண்ணோடங்களுடன் ஒப்பிடும் போது அவற்றின் நான்கில் ஒரு அளவையே கொண்டுள்ளது. சுற்றுப்பாதை மாற்றத்திற்காக இதன் எந்திரம் வானூர்தியின் பின்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது.


இந்த இராணுவ வானூர்தி விண்ணோடங்களைப் போலல்லாது, லித்தியம்-அயன் மின்கலங்களையும், சூரிய ஆற்றலையுமே தனது இயக்கத்துக்கு பாவிக்கிறது.


இத்திட்டத்தின் செலவு, மற்றும் நோக்கம் போன்றவை வெளிப்படுத்தப்படவில்லை.


X-37B என்ற இந்த விண்கலம் 270 நாட்கள் வரை பூமியைச் சுற்றிவரும் ஆற்றல் கொண்டது. ”இது எப்போது திரும்பி வரும் என்று எமக்கு உறுதியாகத் தெரியாது. இது மேற்கொள்ளும் பரிசோதனைகளின் வெற்றியிலேயே எல்லாம் தங்கியிருக்கிறது," என்றார் அமெரிக்க வான் படையின் பேச்சாளர் காரி பேய்ட்டன்.


X-37B என்ற இந்த விமான 1999 இல் அமெரிக்க விண்வெளித் திட்டத்துக்காக வடிவமைக்கப்பட்டது. ஆனால் நாசா இத்திட்டத்தை 2004 ஆம் ஆண்டில் பெண்டகனிடம் கையளித்தது.

மூலம்

[தொகு]