உள்ளடக்கத்துக்குச் செல்

இரான் நாட்டின் வானூர்தி மலையில் மோதி விபத்துக்குள்ளானது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, பெப்பிரவரி 18, 2024

60 பயணிகள் மற்றும் ஆறு வானூர்திப் பணியாளர்களோடு சென்ற பயணிகள் வானூர்தி இரானில் உள்ள இச்சாகுரோசு மலையில் மோதி நொறுங்கியதில், அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக வானூர்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏடிஆர் வானூர்தி (மாதிரி படம்)

இரான் தலைநகர் டெகரானிலிருந்து ஈரானின் தென் மேற்கிலுள்ள யசூஜ் நகருக்கு இந்த வானூர்தி பறந்துகொண்டிருந்தபோது விபத்து நடந்திருக்கிறது. 5.30 கிரின்விச் நேரத்தில் விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. செமிரொம் நகரத்துக்கு அருகே விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


"அனைத்து அவசர காலப் படைகளும் தயாராக இருப்பதாக" அவசர சேவைகளின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.


மோசமான காலநிலை காரணமாக சம்பவ இடத்துக்கு மீட்பு உலங்கூர்தி செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


இந்த வானூர்தி ஏசெமன் வானூர்தி நிறுவனத்தின் ATR 72-500 25 ஆண்டுகள் பழைமையான இவ்வானூர்தி பிரெஞ்சு இத்தாலிய தயாரிப்பாகும். ஏசெமன் ஈரானின் மூன்றாவது பெரிய வானூர்தி நிறுவனமாகும், கடந்ந ஆண்டு 30 போயிங் 737 வானூர்திகளை வாங்க உடன்பாடு போட்டிருந்தது.


வானூர்தில் 60 பயணிகளோடு, இரண்டு பாதுகாவலர்கள், இரண்டு வானூர்தி ஊழியர்கள், வானூர்தி ஓட்டு இருவர் செய்திகள் தெரிவிக்கின்றன.


மோசமான வானிலை மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்படுவதற்கு காரணமாக அமைந்ததால் விபத்து நடந்த இடத்திற்கு அவசரகால குழுக்கள் ஹெலிகாப்டர்களில் செல்வதற்கு பதிலாக சாலை வழியாக செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்று வானூர்தி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளரான குளிவந்த் கூறியுள்ளார்.


சமீபத்திய ஆண்டுகளில் இரானில் பல வானூர்தி விபத்துக்கள் நடைபெற்றுள்ளது. அந்நாட்டிலுள்ள பல வானூர்திகள் நீண்ட காலத்திற்கு முன்னர் வாங்கப்பட்டவையாக உள்ளது.


இரானின் அணுசக்தித் திட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் அந்நாடு மீது விதிக்கப்பட்டுள்ள சர்வதேச தடைகளின் காரணமாக இரான் தனது வானூர்திகளை சரிவர பராமரிப்பதற்கு போராடி வருகிறது.

மூலம்[தொகு]