உள்ளடக்கத்துக்குச் செல்

ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடை விலக்கப்பட்டது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சனவரி 17, 2016


அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இதனால் அதன் சொத்துக்கள் வெளிநாடுகளில் முடக்கப்பட்டது, எண்ணெய் வணிகமும் பாதிக்கப்பட்டது.


2015 யூலை மாதம் ஐக்கிய அமெரிக்கா, ருசியா, பிரித்தானியா. பிரான்சு. செருமனியுடன் உடன்பாடு எட்டப்பட்டது. இந்த உடன்பாட்டின் படி ஈரான் அணுஆயுதம் தயாரிக்க பயன்படும் மையவிலக்கு கருவியை பெருமளவு குறைத்துக்கொண்டதுடன் அராக் நகரிலுள்ள கனநீர் அணு உலையை மூடவும் ஒத்துக்கொண்ட்டது.


பன்னாட்டு அணு சக்தி அமைப்பு ஈரானின் நாடன்ச் உலையில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் 3.67% அளவை தாண்டாத படி கண்காணிக்க கருவிகளை அமைத்துள்ளது.


பன்னாட்டு அணு சக்தி அமைப்பு ஈரான் உடன்படுக்கையின் படி நடந்துகொண்டுள்ளதை உறுதிசெய்ததால் ஈரான் மீதான பொருளாதார தடை முற்றிலும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.


இத்தடை விலக்கத்தால் வெளிநாடுகளில் சுமார் நூறு பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு முடக்கப்பட்ட அதன் சொத்துக்களை அதனால் மீண்டும் கையாள முடியும்.


ஈரான் தனது அணுதிட்டம் அமைதிவழிக்களுக்கானது என்கிறது. யூலை 14 உடன்பாட்டின் படி ஈரான் தன் மீதான பொருளாதார தடைகளை பன்னாட்டு சமூகம் விலக்கிக்கொள்ள 15 ஆண்டுகளுக்கு அதன் பல்வேறு வகையான அணுதிட்டங்களை பன்னாட்டு அணு சக்தி அமைப்பு ஒத்துக்கொண்டுள்ளது. உடன்படிக்கையை மீறினால் அதன் மீது மீண்டும் பொருளாதார தடைகளை ஏற்படுத்தவும் ஒத்துக்கொண்டுள்ளது.



மூலம்

[தொகு]