உள்ளடக்கத்துக்குச் செல்

இருசிய சோயுசு விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து விண்ணில் சுற்றுகிறது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஏப்பிரல் 30, 2015

அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை ஏற்றிச்சென்ற ஆளில்லாத சோயுசு விண்கலம் பொருட்களை நிலையத்திற்கு தரும் முன் கட்டுப்பாட்டை இழந்து விண்ணில் சுற்றுகிறது.


இதன் பெயர் பிராகசு 59 என்பதாகும். இந்த விண்கலம் கசகசக்தானில் உள்ள பைக்கானூர் விண்வெளி தளத்தில் இருந்து ஏவப்பட்டது.


தற்போது அனைத்துலக விண்வெளி நிலையத்தில் மூன்று இருசியர்களும் இரு அமெரிக்கர்களும் ஒர் இத்தாலி நாட்டவரும் உள்ளனர். இந்த விண்கலம் பூமியில் மோதும் என்றும் பூமியின் வளி மண்டலத்தில் உராயும் போது எரிந்து சாம்பலாகிவிடும் என்றும் விண்வெளி நிபுணர்கள் தெரிவித்தனர். அனைத்து பிராகிரசு விண்கலன்களும் அனைத்துலக விண்வெளி நிலையத்தின் குப்பைகளை ஏற்றிக்கொண்டு பூமிக்கு திரும்பும் போது பூமியின் வளி மண்டலத்தில் உராய்ந்து எரியும்படியே வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்விண்கலம் நீர், எரிபொருள், உணவு, உடை, சில கருவிகள் என்று ஏறக்குறைய மூன்று டன் எடையுடைய பொருட்களுடன் சென்றது.


அடுத்த விண்கலம் யூன் மாதத்தில் செல்லும் தனியாரின் இசுபேசு எக்சு ஆகும். கடந்த அக்டோபர் மாதம் ஆர்பிட்டல் சயின்சு என்ற விண்கலம் வெர்சீனியா மாநிலத்தில் ஏவும் போது வெடித்ததில் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை ஏற்றிச்சென்ற பொருட்கள் தீக்கரையாகின.


ஏவுகலத்தில் இருந்து மூன்றாவது நிலையில் பிரிந்த உடனே இது கட்டுப்பாட்டை இழந்தது.


அனைத்துலக விண்வெளி நிலையத்தில் ஆறு மாதத்திற்கான உணவு உட்பட பொருட்கள் இருப்பு இருக்கும் என்ற போதிலும் அக்டோபர் மாதம் ஆர்பிட்டல் சயின்சு விண்கலம் வெடித்ததால் வைத்துள்ள இருப்பில் சிறு பற்றாக்குறை ஏற்பட்டாலும் அதனால் விண்வெளி வீரர்களுக்கு எப்பாதிப்பும் ஏற்படாது என்று நாசா அதிகாரிகள் கூறினர். யூன் மாதத்தில் இசுபேசு எக்சு செல்லும் போது பற்றாக்குறை சரி செய்யப்படும் என்றனர்.


மூலம்[தொகு]