உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை பொதுநலவாய மாநாட்டை மொரிசியசுப் பிரதமரும் புறக்கணிக்கிறார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், நவம்பர் 13, 2013

இலங்கையின் மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி அந்நாட்டில் இவ்வாரம் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்பதில்லை என மொரீசியசுப் பிரதமர் நவீன் ராம்கூலம் அறிவித்துள்ளார்.


ஏற்கனவே கனடியப் பிரதமர் ஸ்டீவன் ஆர்ப்பர், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் தாம் இம்மாநாட்டின் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்து விட்டனர்.


விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் பல போர்க்குற்றங்களில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டதாக இலங்கை மீது பரவலாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், இக்குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு மறுத்து வருகிறது.


நாளை மறுநாள் வியாழன் அன்று கொழும்பில் ஆரம்பமாகும் தலைவர்கள் மாநாட்டில் மொரீசியசின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் அர்வின் பூலெல் பங்குபற்றுவார் என பிரதமர் ராம்கூலம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பிரதமரின் இம்முடிவை அந்நாட்டின் தமிழர்களின் பிரதிநிதி மேனன் மர்டே வரவேற்றிருக்கிறார்.


இந்தியாவும் தனது பிரதிநிதியாக வெளியுறவுத்துறை அமைச்சரை அனுப்புவதற்குத் தீர்மானித்துள்ளது.


மூலம்

[தொகு]