உள்ளடக்கத்துக்குச் செல்

உருசியப் போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், நவம்பர் 25, 2015

சிரியாவில் இசுலாமிய அரசு (ஐஎஸ்) போராளிகளுக்கு எதிரான போரில் உருசியப் படையினர் ஈடுபட்டிருந்தபோது அப்படையின் போர் விமானமான சுகோய் எஸ்.யூ.24 என்ற விமானத்தை துருக்கி அதன் போர் விமானம் எப்.16 என்பதன் மூலம் தாக்குதல் நடத்தி சுட்டு வீழ்த்தியது.


சிரியா மற்றும் அதன் சுற்று வட்டத்தில் அமைந்துள்ள நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும், உலக நாடுகள் அனைத்திற்கும் பயத்தை உண்டுபண்ணும் ஐஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நேச நாடுகளின் படைகள் போர் புரிந்துவரும் வேளையில் உருசியாவும் தனது பங்காக சிரியா எல்லையில் அதன் படைகளைக் குவித்து போர் புரிந்துவருகிறது. இதற்கிடையில் துருக்கி நாடு தனது எல்லைக்குள் உருசிய விமானங்கள் அத்துமீறி நுழைவதாக புகார் கூறிக்கொண்டு இருந்தது. அதே வேளையில் நேற்று செவ்வாய்க்கிழமை உருசிய விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியுள்ளது.


இதற்கு உருசிய அதிபர் பூட்டின் முதுகில் குத்திவிட்டார்கள் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


மூலம்[தொகு]