உள்ளடக்கத்துக்குச் செல்

எகிப்திய நீதிமன்றம் ஒசுனி முபாரக்கிற்கு ஆயுள் தண்டனை வழங்கியது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூன் 2, 2012

சென்ற ஆண்டு அரபு எழுச்சியின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்படக் காரணமாயிருந்தமைக்காக எகிப்தின் முன்னாள் அரசுத்தலைவர் ஒசுனி முபாரக்கிற்கு எகிப்திய நீதிமன்றம் ஒன்று ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.


இத்தீர்ப்பை அடுத்து 84-வயது முபாரக் எகிப்தியச் சிறைக்கு அனுப்பட்ட போது அவர் "கடுமையாக சுகவீனம்" உற்றதாக அரசுத் தொலைக்காட்சி அறிவித்தது.


முன்னாள் உட்துறை அமைச்சர் அபீப் அல்-அட்லி என்பவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. நான்கு முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். ஊழல் வழக்குகளுக்காகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த முபாரக் மற்றும் அவரது மகன்களும் அக்குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.


முபாரக்கிற்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து மக்கல் வீதிகளில் இறங்கி தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். ஆனாலும், பாதுகாப்பு அதிகாரிகள் விடுவிக்கப்பட்டதை அறிந்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இதனையடுத்து கலகமடக்கும் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.


மூலம்

[தொகு]