உள்ளடக்கத்துக்குச் செல்

எபோலா காய்ச்சலின் வளர்ச்சி கட்டுக்குள் இல்லை என உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, செப்டெம்பர் 12, 2014

மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அங்குள்ள நலப்பணியாளர்கள் சமாளிக்க முடியாத அளவு அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இவர்களுக்கு உதவ உலக நாடுகள் நலப்பணியாளர்களை அனுப்பி உதவ வேண்டும் என கோரியுள்ளது.


இந்நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,400 என்று ஜெனிவாவில் நடந்த கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் மார்க்கரெட் சென் கூறினார். லைபீரியா, சியேரா லியோனி, கினி ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.


ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தொடர்பாளர் இக்கொள்ளை நோயை தடுக்க பல புதிய முறைகளை கையாள்வதாக கூறினார். நோய் தாக்குதல் இல்லாதவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள நெகிழி முதலிய எதுவாக இருந்தாலும் அதனால் தங்களை மூடிக்கொண்டு நோயினால் பாதிக்கப்பட்டவர்களை கவனிக்குமாறு கூறியுள்ளார்கள்.


நோயின் பாதிப்பிலிருந்து தப்பியவர்கள் இந்நோய் மீண்டும் தாக்காத வண்ணம் எதிர்ப்பாற்றல் பெற்றுள்ளதால் அவர்கள் இந்நோயினால் பாதிக்கப்ப மக்களின் குழந்தைகளை கவனித்துக்கொள்கிறார்கள்.


கியுபா நலத்துறை அமைச்சர் தங்கள் நாடு 165 நலப்பணியாளர்களை அனுப்புவதாக கூறினார். இதுவே இதுவரை ஒரு நாடு அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நலப்பணியார்களான மருத்துவர்கள் செவிலியர்களை அனுப்புவதாகும். அக்டோபரில் சியேரா லியோனி அவர்கள் செல்ல உள்ளனர். கியுபா நலத்துறை அமைச்சர் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,400 க்கும் மிக அதிமாக இருக்கும் என கருதுகிறார்.


எபோலா தீநுண்மத்தால் பாதிக்கப்பட்ட நலப்பணியாளர்களின் இறப்பு அதிகளவில் உள்ளது. பாதிக்கப்பட்ட 301 பணியாளர்களில் பாதி பேர் இந்நோயினால் இறந்துள்ளனர்.


37 டிகிரிக்கு மேல் காய்ச்சலுடன் வருபவர்கள் பீதியடைந்து காணப்படுகிறார்கள் என்று சியேரா_லியோனில் உள்ள தன்னார்வலர் தெரிவித்தார்.


சியேரா_லியோனில் இரண்டாவது எபோலா சிகிட்சை மையம் தொடங்கப்படுகிறது. எபோலாவை கட்டுப்படுத்த இது பன்னாட்டு செஞ்சிலுவை சங்கத்தின் முயற்சியாகும்.


மூலம்

[தொகு]