உள்ளடக்கத்துக்குச் செல்

ஏமனில் இராணுவ ஆயுதக் கிடங்கு குண்டுவெடிப்பில் 75 பேர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மார்ச்சு 29, 2011

மத்திய கிழக்கு நாடான ஏமனின் தெற்குப் பகுதியில் உள்ள ஆயுதக் கிழங்கு ஒன்றில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் சிக்கி குறைந்தது 75 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.


ஆயுதக் கிடங்கு அமைந்துள்ள ஜார் நகரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இசுலாமியத் தீவிரவாதிகளின் முற்றுகைக்குள்ளானது. இதனை அடுத்து அங்கு இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் சண்டை மூண்டது.


திங்களன்று ஆயுதக்கிடங்கில் வெடிப்பு நிகழ்ந்த போது அங்கு பெருமளவு ஆயுதங்கள் மற்று வெடிபொருட்களை பொதுமக்கள் சூறையாடுவதி ஈடுபட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர்.


கடந்த சில வாரங்களாக ஏமனில் அரசுத்தலைவர் அலி அப்துல்லா சாலி பதவி விலகக்கோரி பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வந்தன. நாட்டில் உள்ள ஸ்திரமற்ற நிலையை தீவிரவாதிகள் தமக்குச் சார்பாகப் பயன்படுத்தி வருவதாக அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


மூலம்

[தொகு]