ஏமனுக்கான தமது தூதுரகங்களை அமெரிக்காவும் பிரித்தானியாவும் மூடின
திங்கள், சனவரி 4, 2010
- 17 பெப்ரவரி 2025: ஐக்கிய அமெரிக்கா யெமனின் தொலைக்கண்டுணர்வியை தாக்கியது
- 17 பெப்ரவரி 2025: சௌதி அரேபியா ஏமனில் மீண்டும் வான் தாக்குதலை தொடங்கியது
- 17 பெப்ரவரி 2025: ஏமனில் படகு கவிழ்ந்ததில் சட்டவிரோத ஆப்பிரிக்கக் குடியேறிகள் 42 பேர் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: யேமனில் பாதுகாப்பு அமைச்சு மீது தாக்குதல், பலர் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: தெற்கு ஏமனில் அல்-கைதா மீது தாக்குதல், 11 பேர் உயிரிழப்பு
அந்நிய ஆதிக்க நாடுகளின் இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என அல் கைடா தொடர்ந்து விடுத்து வரும் அச்சுறுத்தல் காரணமாக ஏமனில் இருக்கின்ற தூதரகத்தை அமெரிக்காவும், பிரித்தானியாவும் மூடியுள்ளன.
ஏமனில் இருக்கின்ற அமெரிக்கக் குடிமக்கள் அனைவரையும் மிகவும் உஷாராக இருக்குமாறு அமெரிக்கா கூறியுள்ளது.
இதற்கிடையே, பயங்கரவாத எதிர்ப்பில் ஏமனுடன் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருக்கின்ற அமெரிக்கப் படைகளின் தளபதி ஜெனரல் டேவிட் பெட்ரேயஸ் பேச்சுக்கள் நடத்தியுள்ளார். இதன் போது தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு கொடுக்கப்படும் நிதியுதவியை இரட்டிப்பாக்குவது குறித்தும் பேசப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்குச் செல்லவிருந்த விமானத்தைத் தகர்க்க அல் காய்தா பயங்கரவாத அமைப்பு முயன்றது என்ற குற்றச்சாட்டுக்கு இடையே இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் சென்ற சனிக்கிழமையன்று முதல் முறையாக அல் காய்தா அமைப்பு மீது குற்றம் சாட்டியுள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.
ஆனால் ஏமனில் அமெரிக்க துருப்புகள் தங்குவது என்பதை ஏற்க முடியாது ஒன்று என்று ஏமனின் மூத்த அரசியல் ஆலோசகர் பிபிசியிடம் தெரிவித்தார்.
மூலம்
[தொகு]- "US shuts embassy as al-Qaeda 'plans attack in Yemen'". பிபிசி, ஜனவரி 3, 2010
- "ஏமனுக்கு உதவ அமெரிக்கா, பிரிட்டன் உறுதி". தமிழ் முரசு, ஜனவரி 4, 2010