ஏமன் வான் தாக்குதலில் முப்பதுக்கும் அதிகமான போராளிகள் கொல்லப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, திசம்பர் 25, 2009


மத்திய கிழக்கு நாடான ஏமனின் கிழக்கு மாகாணமான சாபுவாவில் தமது பாதுகாப்பு படையினர் நடத்திய ஒரு வான் தாக்குதலில் முப்பதுக்கும் அதிகமான அல் கைதா போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஏமன் மற்றும் வெளிநாட்டு எண்ணெய் நிலையங்களைத் தாக்கும் நோக்கில் தொலைதூர மலைப் பகுதி ஒன்றில் கூடி அல் கைதாவினர் திட்டமிட்டுக் கொண்டிருந்த போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.


இந்தத் தாக்குதலில் அல் கைதா மூத்த உறுப்பினர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த வாரம் அல் கயீதா அமைப்பினரின் பல பதுங்கு இடங்களை தாங்கள் தாக்கியதாகவும், அதில் முப்பத்து நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் ஏமன் அரசு தெரிவித்த நிலையில், இந்தத் தாக்குதல்கள் குறித்த செய்தி வந்துள்ளது.


ஏமனின் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலரும் பலியாகியுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.


அமெரிக்கா ஏமனுக்கான தனது இராணுவ உதவிகளை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்[தொகு]