உள்ளடக்கத்துக்குச் செல்

ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை யாழ்ப்பாணம் பயணம்

விக்கிசெய்தி இலிருந்து
யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து ஏனைய செய்திகள்
இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அமைவிடம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

புதன், ஆகத்து 28, 2013

இலங்கைக்கு ஏழு நாள் பயணமாக கடந்த ஞாயிறன்று இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டு வடமாகாண ஆளுனர் உட்பட பல தரப்பினரையும் சந்தித்துக் கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­துடன் குடா­நாட்டின் நிலை­மை­க­ளையும் அவ­தா­னித்­துள்ளார்.


யாழ் பொது நூலகத்தில் நடந்த வைபவம் ஒன்றில் ஆளுனர், மற்றும் அரச அதிகாரிகளை அவர் சந்தித்தார்.


நவி பிள்­ளையின் கவ­னத்தை ஈர்க்கும் முக­மாக வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகு­தி­க­ளிலும் அதற்கு வெளி­யேயும் காணாமல் போன­வர்கள் தொடர்­பான நியா­ய­மான விசா­ர­ணையை வலி­யு­றுத்­தியும் அர­சியல் கைதிகள் மற்றும் புனர்­வாழ்வு முகாம்­களில் தடுப்­பி­லுள்­ள­வர்­களையும் விடு­விக்­கக்­கோ­ரியும் நேற்று யாழ்.பொது நூல­கத்­திற்கு அருகில் கவ­ன­ஈர்ப்புப் போராட்டம் ஒன்று நடை­பெற்­றது. இக் கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தில் சுமார் ஆயி­ரத்­திற்கும் அதி­க­மான காணாமல் போனோரின் உற­வி­னர்கள் இன, மத, பேத­மின்றி மூவின மக்­களும் ஒன்றுதிரண்டு கலந்து கொண்­டனர். இலங்கையில் காணாமல் போனவர்களை தேடும் உறவினர்களின் அமைப்பு, யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அமைப்பு ஆகியன இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


இந்த ஆர்ப்­பாட்­டத்தில் கலந்துகொண்ட மக்கள் தமது உற­வு­களின் விடு­த­லையை வலி­யு­றுத்தி கதறி அழுது கோஷங்­களை எழுப்­பினர். காணா­மல்­போன தமது பெற்­றோரை மீட்­டுத்­த­ரு­மாறு குழந்­தை­களும் சிறு­வர்­களும் தந்­தை­யி­னதும் தாயி­னதும் படங்­களை ஏந்­தி­ய­வாறு அழுது புலம்பி கோஷங்­களை எழுப்­பினர்.


பொது நூல­கத்­திற்கு முன்னால் ஆர்ப்­பாட்டம் நடை­பெற்­ற­பொ­ழுது வட­மா­காண ஆளு­நரைச் சந்­தித்த நவ­நீ­தம்­பிள்ளையை இவ்வார்ப்­பாட்டம் நடை­பெற்ற இடத்­திற்குச் செல்­லாது மாற்று வீதி­யூ­டாக அவ்­வி­டத்­தி­னை­விட்டுக் கூட்டிச் சென்றுள்ளனர். நூலகத்தை நோக்கி செல்ல முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து விட்டனர்.


முள்­ளி­வாய்க்கால், புதுமாத்தளன் மற்றும் கேப்­பாப்­பி­லவு பகு­தி­க­ளுக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட நவ­நீ­தம்­பிள்ளை அந்­தப் ­ப­குதி மக்­களின் குறை­பா­டு­களை கேட்­ட­றிந்­து­கொண்டார். "காணா­மல்­போனோர் விவ­காரம் உட்­பட யுத்­தத்தின் போது பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னை­கள் தொடர்பில் ஆழ­மாகக் கவனம் செலுத்தி அவற்­றுக்கு தீர்வைப் பெற்­றுக்­கொ­டுக்க எனது முழு அதி­கா­ரத்­தையும் பயன்­ப­டுத்­துவேன். பாதிக்­கப்­பட்ட உங்­க­ளது ஆதங்­கங்கள் எனக்கு புரி­கின்­றது," என்று நவ­நீ­தம்­ பிள்ளை தெரி­வித்­துள்ளார்.


நவநீதம்பிள்ளை கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது இரு மாவட்டங்களிலும் படையினரை எங்கும் காணமுடியாத நிலை இன்று காணப்பட்டதாக தமிழ்வின் இணையதள தெரிவித்துள்ளது.


முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஏ-35வீதியூடாக அம்மையார் பயணித்திருந்த நிலையில் மேற்படி வீதியில் அமைக்கப்பட்டிருந்த காவலரண்கள் அனைத்தும் இன்று வெறுமையாக காணப்பட்டதுடன் சுதந்திரபுரம் பகுதியில் சூட்டுத் தவிர்ப்பு வலயமாக பிரகடனப்படுத்திவிட்டு படையினர் மக்கள் மீது தாக்குதல் நடத்திய இடத்திலிருந்த பெருமளவு வாகனங்களை முழுமையாக மறைக்கும் வகையில் உயரமான வேலிகள் போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


மூலம்[தொகு]