ஐரோப்பாவின் பிளாங்க் விண்வெளித் திட்டம் முடிவுக்கு வருகிறது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சனவரி 14, 2012

அண்டத்தில் மிகப் பழமையான ஒளியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஐரோப்பாவின் பிளாங்க் விண்தொலைநோக்கி ஈலியம் குளிர்விப்பி குறைந்து போனதால் அதன் திட்டம் முடிவுக்கு வரவிருக்கிறது.


அடுத்து வரும் சில நாட்களில் இந்த வான் ஆய்வுக்கூடம் உறைந்த நிலையில் இருந்து சூடாகும் என பொறியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால் இத்தொலைநோக்கியின் இரண்டு உபகரணங்களில் ஒன்று செயலிழக்கும்.


2009 மே மாதத்தில் விண்ணுக்கு ஏவப்பட்ட பிளாங்க் விண்கலம் ஏற்கனவே "பெருமளவு தரவுகளைச் சேமித்து பூமிக்கு அனுப்பியுள்ளது," என ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் (ஈசா) வானியலாளர் ஜான் டோபர் தெரிவித்தார். "இன்னும் ஓராண்டு காலத்தில் இத்திட்டத்தின் முடிவுகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும் நாம் சமர்ப்பிக்க வேண்டும்," என அவர் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


பெரு வெடிப்பின் எச்சக் கதிர்வீச்சை ஆராய்ந்திட ஐரோப்பாவினால் உருவாக்கப்பட்ட முதல் திட்டம் பிளாங்க் ஆகும். அண்டத்தின் தோற்றம், பரிணாமம் குறித்த வானியலாளர்களின் கருத்துகளைச் சரிபார்க்க பிளாங்க் உதவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மூலம்[தொகு]