ஓசோன் தேய்வு பற்றி ஆராய்ந்த வேதியியலாளர் செர்வுட் ரோலண்ட் காலமானார்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

செவ்வாய், மார்ச் 13, 2012

மனிதரால் உருவாக்கப்படும் வேதியல் பொருட்களினால் பூமியைப் பாதுகாக்கும் ஓசோன் படலத்தில் தேய்வு ஏற்படுகின்றது என்பதை முதன் முதலில் அறிவித்த அமெரிக்க வேதியியலாளர் செர்வுட் ரோலண்ட் தனது 84வது அகவையில் காலமானார்.


செர்வுட் ரோலண்ட்

1974 ஆம் ஆண்டில் இவர் குளோரோபுளோரோகார்பன்கள் (CFCs) பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். 20 ஆண்டுகளுக்குப் பின்னர் 1995 ஆம் ஆண்டில் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1970களின் இறுதியில் வெளியிடப்பட்ட ரோலண்ட் மற்றும் அவரது குழுவினரினதும் ஆய்வு முடிவுகளை அடுத்து இந்த குளோரோபுளோரோகார்பன்கள் மீது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.


அண்டார்க்டிக்கா மீதுள்ள ஓசோன் படலத்தில் பல துளைகள் காணப்படுவது வேதியியல் பொருட்களினால் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. குளிர்சாதன பெட்டிகள், குளிரூட்டிகள் போன்றவற்றின் பயன்பாடு ஓசோன் தேய்வு பொருட்களான குளோரோபுளோரோகார்பன்களை போன்றவற்றினை வெளியிடுவதுடன் புவியின் நிலையான வாழ்க்கைக்கு பொறுப்பான சூழலுக்கு அபாயத்தினையும் விளைவிக்கின்றது. 1985 ஆம் ஆண்டளவில் குளோரோபுளோரோகார்பன்களைத் தடை செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது. இது மொண்ட்ரியால் உடன்பாடு என அழைக்கப்படுகிறது.


சிறிது காலம் சுவவீனமுற்றிருந்த ரோலண்ட் கடந்த மார்ச் 10 சனிக்கிழமை கலிபோர்னியாவில் காலமானார்.


மூலம்[தொகு]