உள்ளடக்கத்துக்குச் செல்

கத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, திசம்பர் 14, 2024


கத்தார் நாடு வெளிநாட்டு தொழிலாளர்கள் அந்நாட்டிலுள்ள குடிகளின் அல்லது நிறுவனங்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே வேலை வாய்ப்பை பெற முடியும் என்ற காப்லா முறையை ஒழித்துள்ளது.


தொழிலாளர்கள் வேறு வேலைக்கு செல்வதாக இருந்தாலோ நாட்டை விட்டு வெளியேறவோ அவர்களின் முதலாளியின் அனுமதி இம்முறையில் தேவை.


காப்லா முறைக்கு பதில் வேறு ஒப்பந்த தொழிலாளர் சட்டம் இயற்றப்படும் என்றும் அது அதிக நெகிழ்வு தன்மையுடனும் தொழிலாளர்களுக்கு அதிக பாதுகாப்பை வழங்குவதாகவும் இருக்கும் என கத்தார் கூறியுள்ளது.


மனித உரிமை அமைப்புகள் காபலா முறை நவீன கால அடிமை முறையாகும் என்று குற்றம் சுமத்தின. பன்னாட்டு அம்னிசுட்டி அமைப்பு புதிய சட்டம் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை உருவாக்காது என்கிறது. புதிய சட்டம் ஆதரவு வேண்டும் என்ற சொல்லை மட்டுமே நீக்கி இருக்கும் என்றும் பழைய முறையின் அடிப்படை அப்படியே இருக்கும் என்றும் அம்னிசுட்டியின் சேம்சு லைன்ச் கூறினார்.


மூலம்

[தொகு]