கனரகக் கடைசல் 300 வாட் ஒளியீரி விளக்கு வெளியீடு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மே 13, 2013

கனரகக் கடைசல் 300 வாட் ஒளியீரி விளக்கு (LED Light) வெளியீடு பற்றி லார்சன் எலக்டிரானிக்ஸ் நிறுவனம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


உலோக உப்பீனிய விளக்கு 1000 வாட் மின்திறனைக் கொண்டு உருவாக்கக்கூடிய ஒளியூட்டத்தை LEDP5W-60-1227-20C என்னும் இந்தப் புதிய ஒளியீரி விளக்கு வெறும் 300 வாட் மின்திறனை மட்டும் பயன்படுத்தி ஒளியூட்டக்கூடியதாக லார்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது 300 வாட் மின்திறனைக் கொண்டு 29587 ஒளிப்பாயங்கள் வரை இது உற்பத்தி செய்யக்கூடியது எனவும், இது IP68 நீர்காப்பு தரம் கொண்டதாகவும் அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விளக்கில், நீர்காப்பு உட்புற மின்மாற்றிகளுடன் ஒளியீரிகளும், 127-270 விர்சுவல் மாறுதலை மின்சாரத்தினை பெறும் 20 அடி நீள கம்பிவடமும் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதே போன்று உந்து வண்டி அல்லது கப்பல் மின்சார கட்டகத்தில் இருந்து 12 அல்லது 20 வோல்டு மின்னழுத்தத்தை பெறுமாறும் இதனை மாற்றியமைக்கத்தக்கதாக உள்ளது.


மூலம்[தொகு]