கவலை அளிக்கும் கன்னட விக்கிப்பீடியாவின் மெதுவான வளர்ச்சி

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், திசம்பர் 12, 2013

திராவிட மொழிகளில் முக்கியமானதும், தமிழ் மொழியோடு நெருங்கிய தொடர்புடையதுமான கன்னட மொழியில் கன்னட விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இருந்த போதும் ஏனைய திராவிட மொழிகளை விடவும் குறைந்தளவிலான பங்களிப்பையே கன்னட விக்கிப்பீடியா பக்கம் பெற்றிருப்பது வருத்தம் அளிக்கின்றது.


கனட விக்கிப்பீடியர்களின் ஒன்றுகூடல், டிசம்பர் 2010

இதுவரை கன்னட விக்கிப்பீடியாவில் 15,696 (அக்டோபர் 2013) கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இது ஏனைய திராவிட மொழிகளை விடவும் மிக குறைவானதாகவே இருக்கின்றது. தமிழில் 56, 000 கட்டுரைகளும், தெலுங்கு மொழியில் 53,000 கட்டுரைகளும், மலையாளத்தில் 33,528 கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன. பிற இந்திய மொழிகளான இந்தியிலேயே இந்திய அளவில் அதிக அளவாக ஒரு லட்சம் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது. மராத்தி மொழியில் 40,000 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது.


கன்னட மொழியில் சுமார் 40 பங்களிப்பாளர்கள் தொடர்ந்து பங்களித்து வருகின்றனர். ஆனால் பல கட்டுரைகளின் தரமும், தகவல் ஆழமும் தாழ்ந்த நிலையில் தான் உள்ளது என்பது வருந்ததக்கது. கன்னட மொழி விக்கிப்பீடியாவில் பலரும் தொடர்ந்து பங்களிக்கவும், புதியவர்களை பங்களிக்கச் செய்யவும் வேண்டும் என கன்னட மொழி ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.


கடந்த நவம்பர் மாதம் 17 அன்று கன்னட விக்கிப்பீடியாவின் பத்தாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


மூலம்[தொகு]