உள்ளடக்கத்துக்குச் செல்

கிரிமியக் குடியரசு உருசியக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மார்ச்சு 22, 2014

உக்ரைனில் இருந்து பிரிவதாக அறிவித்துக் கொண்ட கிரிமியக் குடியரசை உருசியாவுடன் இணைப்பதற்கான இறுதிச் சட்டமூலங்களில் உருசிய அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டின் நேற்று வெள்ளியன்று கையெழுத்திட்டார்.


ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் உருசியா மீது மேலும் தடைகளை அறிவித்துள்ளன.


கிரிமியாவில் உருசிய ஆதரவுப் படைகள் அங்குள்ள உக்ரைனியக் கப்பல்களையும், இராணுவத்தளங்களையும் கைப்பற்றி வருகின்றன. உக்ரைனியப் படைகளில் பணியாற்றும் கிரிமியர்களைத் தமது பக்கத்துக்கு வருமாறு உருசிய ஆதரவுப் படையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


விளாதிமிர் பூட்டினின் நெருங்கிய சகாக்கள் 12 பேர் மீது ஐக்கிய அமெரிக்கா மேலும் தடைகளை அறிவித்துள்ளது. இதனையடுத்து உருசியப் பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி அவதானிக்கப்பட்டது.


மூலம்

[தொகு]