உள்ளடக்கத்துக்குச் செல்

கிர்கிஸ்தானில் அரசு எதிர்ப்பு வன்முறைகளில் ஒருவர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மே 14, 2010

கிர்கிஸ்தானில் முன்னாள் அரசுத்தலைவரின் ஆதரவாளர்களுக்கும் இடைக்கால அரசு ஆதரவாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களை அடுத்து ஒருவர் உயிரிழந்தார். 37 பேர் அதிகமானோர் காயமடைந்தனர்.


தெற்கு நகரான ஜலாலாபாத்தில் அரசுக் கட்டிடங்களை மீள ஆக்கிரமிக்க அரசு ஆதரவாளர்கள் முயன்றபோது அங்கு சூட்டு சத்தங்கள் கேட்டன.


முன்னதாக, முன்னாள் அரசுத்தலைவர் குர்மான்பெக் பாக்கியெவின் ஆதரவாளர்கள் ஓஷ் நகரில் உள்ள ரசுக் கட்டிடங்களைக் கைப்பற்றியிருந்தன.


ஜலாலாபாத் நகரில் உள்ள அரசுக் கட்டடங்களை நேற்று வியாழக்கிழமை அன்று இருநூறுக்கும் அதிகமான பாக்கியெவ் ஆதரவாளர்கள் ஆக்கிரமித்ததை அடுத்து இன்று வெள்ளிக்கிழமை இடைக்கால அரசின் ஆதரவாளர்கள் 4,000 பேர் அக்கட்டடங்களுள் நுழைந்தனர். இதனை அடுத்து அங்கு இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.


நகரில் உடனடியாக வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்புக்காக வீடு திரும்பினர்.


திரு மாக்கியெவ் சென்ற மாதம் இடம்பெற்ற கிளர்ச்சியை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அவர் தனது குடும்பத்துடன் பெலருஸ் நாட்டுக்குத் தப்பி ஓடினார். இதனை அடுத்து புதிய இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. ஆனாலும் நாடு முழுவதும் பலத்த கொந்தளிப்பு நிலை நீடிக்கிறது.

மூலம்

[தொகு]