உள்ளடக்கத்துக்குச் செல்

கிழக்குத் திமோர் ஜனாதிபதி தன்னைச் சுட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கினார்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஆகத்து 26, 2010

கிழக்குத் திமோர் அதிபர் தன்னைச் சுட்டுப் படுகாயப்படுத்திய போராளிக் குழுத் தலைவர் கஸ்தாவோ சல்சின்கா மற்றும் அவரது 22 போராளிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கினார்.


2009 அம் ஆண்டில் கிழக்குத் திமோர் அதிபர் ஜொசே ரமோஸ்-ஓர்ட்டா

2008 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 இல் தலைநகர் திலியில் இடம்பெற்ற சூட்டுச் சம்பவத்தில் அதிபர் ஜொசே ரமோஸ்-ஓர்ட்டா படுகாயமடைந்த நிலையில் ஆத்திரேலியாவின் டார்வின் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லட்டு அங்கு வைத்து அவருக்கு ஐந்து முறை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.


போராளிகளில் ஒருவரான மார்செலோ சேட்டானோ தன்னிடம் மன்னிப்புக் கேட்டார் என்றும், அவர் தம்மைக் கொல்லுவதற்கு முயற்சிக்கவில்லை என்றும் கூறியதாக அதிபர் “சிட்னி மோர்னிங் எரால்ட்” பத்திரிகைக்கு சென்ற ஆண்டு அதிபர் தெரிவித்திருந்தார். அவர்களை விடுவித்துள்ளதாக தற்போது ஜனாதிபதி அறிவித்துள்ளதாக “டெம்போ செமனால்” என்ர பத்திரிகை அறிவித்துள்ளது. இவர்களுக்கான பொது மன்னிப்பு கடந்த வெள்ளிக்கிழமை அன்று அறிவிக்கப்பட்டது.


ரமோஸ்-ஹோர்ட்டா 1996 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை கிழக்குத் திமோர் பிரதமருடன் இணைந்து பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]