உள்ளடக்கத்துக்குச் செல்

கூகுளின் நேடிவ் கிளைன்ட் குரோமிற்கு வருகிறது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, செப்டெம்பர் 17, 2011

கூகிள், சர்ச்சைக்குரிய சாண்டுபாக்சிங் தொழில்நுட்பத்திற்கு இடையில் உலாவிக்குள் சி, சி++ நிரல்களை பொருத்தும் வசதியான நேடிவ் கிளையன்ட்-ஐ அதிகாரப்பூர்வமாக கூகிள் குரோமின் நிலையான பதிவில் பயன்பாட்டிற்காக வைத்துள்ளது. கடந்த மாதம் மௌன்டின் வியூ குரோமின் பீட்டா பதிவில் நேடிவ் கிளையன்ட் (native cliant) வெளியிடப்பட்டது. பின் வெள்ளிக்கிழமை, புதிய வலை ஒலி பநிஇ (வெப் ஆடியோ ஏபிஐ) கொண்ட குரோம் 14 நிலைப்பதிவில் நேடிவ் கிளைன்ட்-ஐயும் வெளியிட்டது.


உலாவிகளில் ஜாவாஸ்கிரிப்டினால் முப்பரிமாண கணினிவிளையாட்டுக்கள், காணொளி திருத்தங்கள், இன்னும் பிற பயன்பாட்டு நிரல்கள் போன்றவைகளை வேகத்துடன் உருவாக்க இயலாததால் நேடிவ் கிளையன்ட் ஆரம்பிக்கப்பட்டது.


"ஜாவாஸ்கிரிப்ட் ஒரு நம்ப முடியாத மென்பொருள்; அது அதன் நற்பயனை எப்போதும் வைத்துக் கொண்டே இருக்கிறது. ஜாவாஸ்கிரிப்ட் எழுதாத நிறைய நல்ல மென்பொருள்களும் உள்ளன. அறிவுத்திறனுள்ள நிறைய மென்பொருள் வளர்ப்போர்களும் இது போன்ற வேறு நிரலாக்க மொழிகளில் பணிபுரிய விரும்புகின்றனர்." என்று கூகுளின் நேட்டிவ் கிளையண்ட் திட்டத்தைக் கவனிக்கும் பிராட் சென் கூறினார்.


"இந்த திட்டப்பணியில் நாங்கள் வெற்றி பெற்றால், பின் பிறமொழிகளையும் இதில் சேர்க்க முயலுவோம். எங்களுக்கு ஜாவாஸ்கிரிப்ட் அல்லாத பிற மொழிகளையும் இயக்க ஒரு பொதுவான தளம் தேவை. அதே நேரத்தில் பெயர்வுத்தன்மையும், பாதுகாப்பும் பலமாக இருக்க வேண்டும்." என்று அவர் மேலும் கூறினார்.


குரோம் 14 நிலைப்பதிவின் நேடிவ் கிளைன்ட் தற்போது கூகுளின் வலை அங்காடியில் உள்ள பயன்பாடுகளை மட்டுமே இயக்கம். இந்த வகையில் கூகிள் தனது


மற்ற தளங்களில் உள்ள நிரல் வளர்போர்களையும் உறுதி செய்ய வேண்டும். கூகுளின் மாக் பதிவில் பல புதிய வசதிகளை உருவாக்கியுள்ளது.


மூலம்

[தொகு]